டெல்லி கனமழை – காணொளி மூலம் வழக்கு விசாரணை.!
வட மாநிலங்ளில் கனமழை கொட்டி வருவதால் பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலைகள் மட்டுமின்றி, தலைநகரில் உள்ள நீதிமன்ற அறைகளின் செயல்பாடும் மழையால் பாதிக்கப்பட்டது.
இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. தற்போது, டெல்லியில் கனமழை காரணமாக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் காணொளி மூலம் வழக்குகள் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாய கட்டடத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் நேரடி விசாரணைக்கு இடைக்கால தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வழக்கறிஞர்கள் நேரடி விசாரணைக்காக நீதிமன்றம் வர வேண்டாம் தேசிய நிறுவனம் சட்ட தீர்ப்பாய தலைவர் உத்தரவிடப்பட்டுள்ளது.