மிக்ஜாம் புயல் : தமிழகத்தை தொடர்ந்து ஆந்திராவில் பலத்த மழை.. நீரில் முழ்கும் தாழ்வான பகுதிகள்!
கடந்த சில நாட்களாக வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டத்தில் கனமழை முதல் அதி கனமழை வரை கொட்டி தீர்த்து புரட்டி போட்டது. இதில் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக அதி கனமழை பொழிந்தது.
சென்னை, திருவள்ளூரில் வரலாறு காணாத கனமழை கூடி தீர்த்தத்தால், பல இடங்களில் நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக மாறியது. தற்போது, மிக்ஜாம் புயல் சென்னையை விட்டு விலகி சென்றதால், மழை நின்று, மீட்ப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் தற்போது தெற்கு ஆந்திர பிரதேசம் பாபட்லா கடற்கரை பகுதியில் கரையை கடந்து வருகிறது. இதன் காரணமாக தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆந்திர அரசும் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
கரையை கடக்கும் மிக்ஜாம் புயல்… சூறை காற்றுடன் கொட்டித்தீர்க்கும் கனமழை.!
ஆந்திர மாநில ஓங்கோல் பகுதி கடற்கைரையில் இருந்து 30கிமீ தொலைவிலும், பாபட்லா கடற்கரையில் இருந்து தெற்கு தென்மேற்கு திசையில் 60கிமீ தொலைவிலும் புயல் கரையை கடந்து வருகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. புயல் கரையை கடந்து வருவதால் தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியில் பலவேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நெல்லூர் தொடங்கி பிரகாசம் வரை ஆந்திராவில் உள்ள கடலோர மாவட்டங்களில் பலத்த மழையால் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லூர் மாவட்டத்தில் சாலைகள், வயல் வெளிகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் மூழ்கி உள்ளன. ஆந்திராவில் மழை பாதித்த மக்கள் மீட்கப்பட்டு தர்க்கிளைக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயலை எதிர்கொள்ள மத்திய, மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.