கேரளாவின் 9 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு.! ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்.!
கேரளாவின் ஒன்பது மாவட்டங்களுக்கு வரும் ஜூன் 26 மற்றும் 27ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் நான்கு வகையான வண்ணத்தில் எச்சரிக்கை முறையை கொண்டுள்ளது. அதாவது பச்சை என்றால் எந்த எச்சரிக்கையும் இல்லாத லேசான மழை, மஞ்சள் என்றால் மிதமான மழை, ஆரஞ்சு என்றால் எச்சரிக்கையுடன் கூடிய அதிக மழைப் பொழிவு மற்றும் சிவப்பு என்றால் எச்சரிக்கையுடன் மிக அதிக மழை முதல் மிக அதிக மழைப்பொழிவு, அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொருள்.
இந்த நிலையில் தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் கேரளாவின் ஒன்பது மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதாவது கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பதனம்திட்டா , கோட்டயம், அலபுழா, எர்ணாகுளம், இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமான அதிக மழைப்பொழிவு இருக்க வாய்ப்பு உள்ளதாகவும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. ஜூன் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.