ஒடிசா மற்றும் ஆந்திராவில் சூறாவளி எச்சரிக்கை..!
ஆந்திரா, ஒடிசாவில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒடிசா மற்றும் ஆந்திராவிற்கு சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு-மத்திய வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. மேலும் குலாப் சூறாவளி புயலாக மாறி தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திராவை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து கொல்கத்தா, கிழக்கு மிட்னாபூர், வடக்கு 24 பர்கானா மற்றும் தெற்கு 24 பர்கானா உள்ளிட்ட மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், புயல் காரணமாக தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஆந்திரா மற்றும் ஒடிசாவில் சூறாவளி எச்சரிக்கை இருப்பதால் மேற்கு வங்கத்தின் கடலோரப் பகுதிகளிலும் பலத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.