கனமழை எச்சரிக்கை.! புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம்.!
தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு.
வடக்கு வங்கக்கடல் பகுதியில் ஆக.4 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் நாளை முதல் தென்மேற்கு பருவமழை மேலும் வலுவடைய கூடும்.
இதனால் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அங்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது .