டெல்லியில் பலத்த மழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை..!
டெல்லி-என்.சி. ஆரில் பலத்த மழை மழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று காலை டெல்லி-என்.சி. ஆரில் பலத்த மழை பெய்துள்ளது, இதனால் அங்கு வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகக் குறைந்து விட்டது மேலும் இந்திய வானிலை ஆய்வுத் துறை டெல்லியில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் வடமேற்கு மற்றும் வடக்கு டெல்லியில் அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு. ஹரியானா மற்றும் உத்திரபிரதேசம் அருகிலுள்ள பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
இந்நிலையில் ஜெய்ப்பூரில் கனமழை பெய்ததால் சில இடங்களில் நீர் தேங்கியுள்ளது, மேலும் ஜெய்ப்பூரில் 48செமீ மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது, மேலும் நீர் தேத்தக்கதால் போக்குவரத்தை கட்டுப்படுத்த போக்குவரத்து அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உள்ளனர்.
மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை, பலத்த மழை பெய்ததால், 4 பேர் இறந்தனர், தாழ்வான பகுதிகளை வெள்ளத்தில் முழ்கியுள்ளனர், மேலும் சில முக்கியமான சாலை நீளங்களில் போக்குவரத்தை நிறுத்தினர்.