டெல்லியில் கனமழை எதிரொலி;சாலையில் தேங்கிய நீரில் நீந்தி விளையாடும் சிறுவர்களின் வைரல் வீடியோ..!
டெல்லியில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் குளம் போன்று தேங்கியுள்ள நேரில் சிறுவர்கள் நீந்தி விளையாடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லியில் அதிகாலை முதல் பெய்து வரும் கன மழையால்,இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது.மேலும்,விமான நிலையம் முழுவதும் தண்ணீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளதால், விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
விமான சேவைகள் முடங்கியது குறித்து டெல்லி சர்வதேச விமான நிலையம் கூறுகையில்:”நான்கு உள்நாட்டு விமானங்கள் மற்றும் ஒரு சர்வதேச விமானம் டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் மற்றும் அகமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டன, தேசிய தலைநகரில் கனமழை காரணமாக ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். திடீரென பலத்த மழை பெய்ததால், சிறிது நேரம், முகத்துவாரத்தில் தண்ணீர் தேங்கியது. அதை ஆராய எங்கள் குழு உடனடியாக சீரமைக்கப்பட்டது மற்றும் பிரச்சினை தீர்க்கப்பட்டது”,என்று தெரிவித்துள்ளது.
இதேபோல,டெல்லி நகர சாலைகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தற்போது டெல்லியில் பெய்து வரும் பருவமழை 1005.3 மில்லி மீட்டர் ஆக பதிவாகியுள்ளது. 2010ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக பருவ மழையளவு 1000 மில்லி மீட்டரை தாண்டியிருக்கிறது.இதனால்,தொடர்ந்து டெல்லியில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,டெல்லியில் உள்ள எம்சிடி சிவிக் மையத்திற்கு அருகே சாலைகளில் குளம் போன்று தேங்கியுள்ள நேரில் சிறுவர்கள் நீந்தி விளையாடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
#WATCH | Children swim amid heavily waterlogged roads following continuous rains in the National Capital; visuals from near MCD Civic Centre. pic.twitter.com/N5E3fjFNGz
— ANI (@ANI) September 11, 2021