ஏடிஎம் கார்டுகள் இல்லாமல் தங்களது வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க ஒரு புதிய வசதியை நாடுமுழுவதும் அறிமுகப்படுத்த உள்ளதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. முன்பு நாம் கணக்கில் இருந்து பணம் எடுக்க வேண்டும் என்றால் வங்கிக்கு நேரில் சென்று வரிசையாக நின்று பணம் எடுத்து வரும் நிலைமை இருந்தது.
இதனால் வங்கிகளில் கூட்டத்தை குறைக்கவும், வங்கிகளுக்கு தங்களது வாடிக்கையாளர்கள் வராமல் எளிதாக பணம் எடுக்கவும் கொண்டுவரப்பட்டது தான் ஏ.டி.எம் கார்டுகள். தற்போது எஸ்பிஐ வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு இன்னும் எளிமையாக பணம் எடுக்க ஏ.டி.எம் கார்டுகள் இல்லாமலே ஏ.டி.எம்மில் பணம் எடுக்கும் புதிய முறை அறிமுகம் செய்ய உள்ளது.
இதற்காக கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி முதல் சில இடங்களில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் இந்த முறை சோதனை வைத்து வெற்றி பெற்றதை தொடர்ந்து நாடு முழுவதும் இனி யோனோ மொபைல் ஆப்பை பயன்படுத்தி ஏ.டி.எம்மில் கார்ட் இல்லாமல் பணம் எடுக்கும் முறை அறிமுகம் செய்ய உள்ளதாக எஸ்பிஐ வங்கியின் தலைவர் ரஜினிஷ் குமார் கூறியுள்ளார்.
இந்த யோனோ மொபைல் ஆப் மூலம் 6 ரகசிய எண்ணை கொண்டு வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க முடியும் . இந்த ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் ஒரு பரிவர்த்தனை மூலமாக ரூ.10000 வரை எடுக்க முடியும். ஒரு நாளைக்கு 2 முறை மட்டும் இந்த மொபைல் ஆப்ஸை பயன்படுத்தி பணம் எடுக்க முடியும்.
தற்போது நாடு முழுவதும் 68,000 யோனோ கேஷ் பாயிண்டுகள் உள்ளது. அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் யோனோ கேஷ் பாயிண்டுகள் உயர்த்த உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…