இனி ஏ.டி.எம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்..! எஸ்பிஐ அதிரடி அறிவிப்பு ..!

Default Image

ஏடிஎம் கார்டுகள் இல்லாமல் தங்களது வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க ஒரு புதிய வசதியை  நாடுமுழுவதும் அறிமுகப்படுத்த உள்ளதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. முன்பு நாம் கணக்கில் இருந்து பணம் எடுக்க வேண்டும் என்றால் வங்கிக்கு நேரில் சென்று வரிசையாக நின்று பணம் எடுத்து வரும் நிலைமை இருந்தது.

இதனால் வங்கிகளில் கூட்டத்தை குறைக்கவும், வங்கிகளுக்கு தங்களது வாடிக்கையாளர்கள் வராமல் எளிதாக பணம் எடுக்கவும் கொண்டுவரப்பட்டது தான் ஏ.டி.எம் கார்டுகள். தற்போது எஸ்பிஐ வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு இன்னும்  எளிமையாக பணம் எடுக்க ஏ.டி.எம் கார்டுகள் இல்லாமலே ஏ.டி.எம்மில் பணம் எடுக்கும் புதிய முறை அறிமுகம் செய்ய உள்ளது.

இதற்காக கடந்த மார்ச் மாதம்  15-ம் தேதி முதல் சில இடங்களில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் இந்த முறை சோதனை வைத்து வெற்றி பெற்றதை தொடர்ந்து நாடு முழுவதும் இனி யோனோ மொபைல் ஆப்பை பயன்படுத்தி  ஏ.டி.எம்மில்  கார்ட் இல்லாமல் பணம் எடுக்கும் முறை அறிமுகம் செய்ய உள்ளதாக எஸ்பிஐ வங்கியின் தலைவர் ரஜினிஷ் குமார் கூறியுள்ளார்.

இந்த யோனோ மொபைல் ஆப்  மூலம் 6  ரகசிய எண்ணை கொண்டு வாடிக்கையாளர்கள்  பணத்தை எடுக்க முடியும் . இந்த ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் ஒரு பரிவர்த்தனை மூலமாக  ரூ.10000 வரை எடுக்க முடியும். ஒரு நாளைக்கு 2 முறை மட்டும்  இந்த மொபைல் ஆப்ஸை பயன்படுத்தி பணம் எடுக்க முடியும்.

Image result for எஸ்பிஐ ஏ.டி.எம் கார்டு

 தற்போது நாடு முழுவதும் 68,000 யோனோ கேஷ் பாயிண்டுகள் உள்ளது. அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் யோனோ கேஷ் பாயிண்டுகள் உயர்த்த உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்