கனமழை பாதிப்பு : 30,000 வீடுகள் கடும் சேதம்.! அசாம் முதலவரின் முன்பண கோரிக்கை…
அசாமில் கனமழை காரணமாக 30,000 முதல் 40,000 வீடுகள் வரையில் சேதமடைந்துள்ளது.
இந்தியாவில் தற்போது பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கோவா, மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
அப்படி தான் அசாம் மாநிலத்திலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் அதிகரித்து வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பல்வேறு வீடுகள் சேதமடைந்தன.
இதுவரை 30,000 முதல் 40,000 வீடுகள் வரையில் சேதமடைந்ததாகவும், இதனால், இந்திய பேரிடர் ஆணையத்திடம் இந்த வீடுகள் சேதமடைந்ததற்கு மீட்புக்காக முன்பணம் கேட்டுள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா தெரிவித்துள்ள்ளார்.