கெஜ்ரிவால் கைது..! வீட்டை சுற்றி 144 தடை.. டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

Arvind Kejriwal

Arvind Kejriwal: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை தொடர்ந்து, அவரது இல்லம் சுற்றி 144 தடை பிறப்பித்து, தலைநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், மதுபான கொள்கை ஊழல் வழக்கில் நேற்று இரவு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவலை அமலாக்கத்துறை கைது செய்தது.

Read More – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது! அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த கைது நடவடிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதனிடையே, நேற்று இரவு 9 மணிக்கு கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் 11 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். கைதுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலையில், இன்று விசாரிக்கப்பட உள்ளது. அதுமட்டுமில்லாமல், பாஜகவுக்கு எதிராக விடிய விடிய போராட்டம் நடத்தி வரும் ஆம் ஆத்மி கட்சியினர், இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

Read More – பாஜகவின் செயல் வெட்கக்கேடானது! அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு காங்கிரஸ், திமுக, அதிமுக கண்டனம்

இதனால் டெல்லி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது. இந்த சூழலில் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை தொடர்ந்து அவரது வீட்டை சுற்றி 144 தடை உத்தரவை டெல்லி காவல்துறை பிறப்பித்துள்ள நிலையில், தலைநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக அவரது இல்லத்தை சுற்றி அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு உள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

மேலும், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு மருத்துவர்கள் குழு வருகை தந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்