வட இந்தியாவில் கடுமையான பனிமூட்டம்: விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து பாதிப்பு

Default Image

வட இந்தியாவில் கடுமையான பனிமூட்டம் காரணமாக விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது 

டெல்லி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக  சாலைகள் முற்றிலுமாக பனியால்  மறைக்கப்பட்டதால்  தெரிவுநிலை 25 மீட்டருக்கும் குறைவாகக் இருந்தது. இதனால் வாகனங்கள் காலை நேரங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்ட நிலையில் சென்றன.

செயற்கைக்கோள் படங்கள் மற்றும் ஐஎம்டியில் இருந்து கிடைக்கும் தெரிவுநிலை தரவுகளின்படி, பனிமூட்டமானது பஞ்சாப் மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு ராஜஸ்தானிலிருந்து பீகார் வரை ஹரியானா, சண்டிகர் மற்றும் டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் முழுவதும் பரவியுள்ளது.

தேசிய தலைநகரை சூழ்ந்த அடர்ந்த பனிமூட்டம் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (IGIA) விமான போக்குவரத்தில்  தாமதத்தை ஏற்படுத்தியது. மேலும் வடக்கு ரயில்வே மண்டலத்தில் வரும்  ராஜ்தானி எக்ஸ்பிரஸ்  உட்பட 29 ரயில்கள் பனிமூட்டம் காரணமாக திங்கள்கிழமை மட்டும் தாமதமாக இயக்கப்பட்டன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்