கடும் வெயில் எதிரொலி : பள்ளிகளுக்கு 22ம் தேதி வரை விடுமுறை-பீகார் அரசு அறிவிப்பு
வெயில் காரணமாக பீகார் மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு 22ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கோடை வெயில் கொழுத்தி வருகின்றது.கடும் வெப்பம் மற்றும் அனல் காற்றின் காரணமாக பீகாரில் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்த வகையில் இன்றுவரை வெயிலால் 61 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு வயதானவர்கள் வெப்பம் தாங்க முடியாமல் கடும் அவதிக்கும் உள்ளாகியுள்ளனர்.
வெப்பத்தால் பாதிக்கப்பட்டு பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே காலை நேரங்களில் மக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என பீகார் அரசு அறிவித்துள்ளது
இந்நிலையில் தற்போது வெயில் காரணமாக பீகார் மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு 22ம் தேதி வரை விடுமுறை என்று பீகார் அரசு அறிவித்துள்ளது