அகமதாபாத்தில் NSUI மற்றும் ABVP மாணவர் அமைப்பினர்களுக்கு இடையே கடும் மோதல்.!

Default Image
  • ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறையை எதிர்த்து, நேற்று அகமதாபாத்தில் ஏபிவிபி அலுவலகம் எதிரே போரட்டம் நடத்தினர்.
  • இந்த மோதலில் குஜராத் மாநில என்எஸ்யுஐ (NSUI) தலைவர் நிகில் சவானிக்கு தலையில் அடிபட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

டெல்லியில் உள்ள ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் ஞாயிற்று கிழமை ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது திடீரென முகத்தை மறைத்துக்கொண்டு பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்த மர்ம நபர்கள் ஹாக்கி மட்டைகள், இரும்பு கம்பிகள் போன்ற ஆயுதங்களை கொண்டு ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரையும் தாக்கினர். இந்த தாக்குதலில் ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் ஆயிஷா கோஷ் கடுமையாக தாக்கப்பட்டார். இந்த தாக்குதலுக்கு பாஜக மாணவரணியான (ஏ.பி.வி.பி.) காரணம் என குற்றம் சாட்டினார்.

அந்த வன்முறையை எதிர்த்து, நேற்று அகமதாபாத்தில் ஏபிவிபி அலுவலகம் எதிரே போரட்டம் நடத்தினர். அப்போது இரு அமைப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் குஜராத் மாநில என்எஸ்யுஐ (NSUI) தலைவர் நிகில் சவானிக்கு தலையில் அடிபட்டு. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதை தவிர, என்எஸ்யுஐ உறுப்பினர்கள் தங்கள் அலுவலகத்தை உடைத்து தங்கள் உறுப்பினர்களை அடித்ததாக ஏ.பி.வி.பி. ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. ஆனால் காவல்துறை மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தது. பின்னர் இரு அமைப்பை சேர்ந்தவர்களும் மாறி மாறி குற்றம்சாட்டினார்.

மேலும் திங்கள் கிழமை அகமதாபாத் ஐஐஎம் அருகே ஜே.என்.யு வன்முறையை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது. ஆனால் அங்கு வந்த ஏபிவிபி உறுப்பினர்களை அங்கிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். காங்கிரஸ் தலைவர் ஹர்திக் படேல் இந்த நிகழ்வு தொடர்பாக கூறியபோது, காவல் துறையினரும் ஏபிவிபி உறுப்பினர்களும் சேர்ந்து இந்த தாக்குதலை நடத்தியதாகத் தெரிவித்தார். ஆனால் வடகாம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி, தமது நண்பர் நிகில் சவானியை ஏ.பி.வி.பி. குண்டர்கள் அடித்ததாகவும், அந்த தாக்குதலை தடுக்க காவல்துறையினர் எதுவும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்