ஹிமாச்சலில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை.!
கனமழை வெள்ளத்தால் சீர் குலைந்துள்ளது ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலம்.
உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், மேகலயா, ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். கேரள, கர்நாடக மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் 12ம் தேதி முதல் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதில், கனமழை காரணமாக கடும் பாதிப்படைந்துள்ள, இமாச்சலப் பிரதேசத்துக்கு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்துள்ளது. ஹிமாச்சல் பிரதேசத்தின் சோலன் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 13.5 செ.மீ மழை பதிவாகியுள்ளதாம்.
May God save the people , their homes and livelihood ????
Heart breaking vedios of Flood & Landslide in Himachal Pradesh#Parwanoo #HimachalPradesh #Beasriver #kullumanali #Mandi #Thunag #Sirmaur@praddy06 @ChennaiRains @RainStorm_TN pic.twitter.com/5WYUvN0BGT— Shahidarafi (@Shahidarafi51) July 10, 2023
கனமழை வெள்ளப்பெருக்கினால் நிலச்சரிவு ஏற்பட்டு பல இடங்களில் வீடு வெள்ளத்தில் அடித்து சென்றது. அதுபோல், சம்பா – பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில், பானிகேட் பகுதியில் சாலையில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால், அந்த வழியே போக்குவரத்து நிறுத்தப்படுள்ளது. இந்நிலையில், மக்கள் வீட்டிலேயே இருங்கள் என்று இமாச்சல் அரசு அறிவுறுத்தி வருகிறார்கள்.