ஆக்ரா:கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனது கணவனைக் காப்பாற்றுவதற்காக பெண் ஒருவர்,கணவனின் வாயில் காற்றை ஊதியப் புகைப்படம் காண்போரை மனம் உடைய செய்கிறது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமாக பரவி வருகிறது.இதனால்,மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் மற்றும் படுக்கை வசதி பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் இறக்கின்றனர்.
இந்த நிலையில்,உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் வசிக்கும் ரேணு சிங்கால் என்ற பெண்,தனது கணவர் ரவி சிங்காலுக்கு (47) கொரோனா தொற்றின் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதனால் அருகில் உள்ள சரோஜினி நாயுடு மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தார்.
மருத்துவமனைக்கு வெளியே ஆட்டோவில் காத்திருந்தபோது கணவரின் நிலை மோசமடைந்ததால்,அவரைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் ரேணு ஈடுபட்டார்.மேலும்,கணவரின் வாயில் காற்றை ஊதி ஆக்சிஜன் அளிக்க முயன்றார்.இருப்பினும்,ரவி மூச்சு விட முடியாமல் பரிதாபமாக இறந்தார்.
இதனையடுத்து,ரேணு தனது கணவர் ரவியைக் காப்பாற்ற போராடும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…