இதயத்தை நொறுக்கும் புகைப்படம்..! உயிரைக் காப்பாற்ற கணவனின் வாயில் காற்றை ஊதும் பெண்..!

Default Image

ஆக்ரா:கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனது கணவனைக் காப்பாற்றுவதற்காக பெண் ஒருவர்,கணவனின் வாயில் காற்றை ஊதியப் புகைப்படம் காண்போரை மனம் உடைய செய்கிறது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமாக பரவி வருகிறது.இதனால்,மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் மற்றும் படுக்கை வசதி பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் இறக்கின்றனர்.

இந்த நிலையில்,உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் வசிக்கும் ரேணு சிங்கால் என்ற பெண்,தனது கணவர் ரவி சிங்காலுக்கு (47) கொரோனா தொற்றின் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதனால் அருகில் உள்ள சரோஜினி நாயுடு மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தார்.

மருத்துவமனைக்கு வெளியே ஆட்டோவில் காத்திருந்தபோது கணவரின் நிலை மோசமடைந்ததால்,அவரைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் ரேணு ஈடுபட்டார்.மேலும்,கணவரின் வாயில்  காற்றை ஊதி ஆக்சிஜன் அளிக்க முயன்றார்.இருப்பினும்,ரவி மூச்சு விட முடியாமல் பரிதாபமாக இறந்தார்.

இதனையடுத்து,ரேணு தனது கணவர் ரவியைக் காப்பாற்ற போராடும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்