2003-ம் ஆண்டின் இந்திய அணியின் தலைவராக கங்குலி இருந்தபோது அவரும் நடிகை நக்மாவும் காதலிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் கங்குலி விளையாடும் போட்டிகளை பார்ப்பதற்கு நக்மா தவறாமல் வந்து விடுவார், இருவரும் சேர்ந்து அவ்வப்போது பொது இடங்களில் ஒன்றாக சென்று வந்தனர். இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியான நிலையில் இருவரும் திடீரென பிரிந்தனர்.
இந்நிலையில், 18 ஆண்டுகள் கழித்து இதுகுறித்து மனம் திறந்துள்ள நடிகை நக்மா எனக்கும் கங்குலிக்கும் இடையேயான நட்பு மிகவும் அழகானது. பின்னர் எங்கள் இருவருக்குமான நட்பு நெருக்கத்தில் இருந்த சமயத்தில் அவரது விளையாட்டு பாதிக்கப்பட்டதாக பல விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருந்தது. ஆனால் எங்களுடைய நட்புதான் கங்குலியின் ஆட்டத்தைப் பாதித்தது என்று பத்திரிகைகளில் எழுதப்பட்டது. இதனால் மிகவும் நான் சோகத்தில் தள்ளப்பட்டேன், இதயம் நொறுங்கிப்போனது. மேலும் நக்மா கூறுகையில், மற்றவர்களின் பார்வை எங்களை புண்படுத்தியதால், இருவரும் சேர்ந்து பேசி பிரிவது என்று முடிவெடுத்து பிரிந்துவிட்டோம் என தெரிவித்தார்.
சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டம் எதிராக கங்குலி மகள் சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்தை பதிவிட்டிருந்தார். இதற்கு கங்குலி, தனது டிவிட்டர் பக்கத்தில், எனது மகள் சின்ன பொண்ணு, அவளுக்கு இங்கு நடக்கும் அரசியல் பற்றி தெரியாது, என பதிவிட்டு இருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக மகிலா காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள் நடிகையுமான நக்மா, தனது டிவிட்டர் பக்கத்தில், கருத்துக்களை சுதந்திரமாக பதிவிட அனுமதியுங்கள், அவளை பாராட்டுங்கள் என கங்குலியை டேக் செய்தும், வாழ்த்துக்கள் கூறி சனாவை டேக் செய்தும் தனது கருத்தை டிவிட்டரில் தெரிவித்தார். தற்போது கங்குலி பிசிசிஐயின் தலைவர் பதிவில் இருக்கிறார் என குறிப்பிடப்படுகிறது.
நேபாளம் : நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று ஜனவரி 7, 2025 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக…
ஒட்டாவோ : கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வேதனையுடன் அறிவித்துள்ளார்.…
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில்…
இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்ற நிலையில், ஆளுநர் கலந்துகொண்டு உரையாற்றுவார் என கூறப்பட்டது. ஆனால்,…
சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…
நியூ யார்க் : குல்தீப் குமார் எனும் 35 வயது மதிக்கத்தக்க நபர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த…