பள்ளிகளை திறக்க அனுமதி ! வழி காட்டு நெறிமுறைகள் என்னென்ன ?

Published by
Venu

செப்டம்பர் 21 -ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாம் மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், 4 கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான பள்ளிகளை திறப்பதற்கான வழி காட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது .

வழி காட்டு நெறிமுறைகள் :

  • செப்டம்பர் 21 -ஆம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியரிடம் ஆலோசனை பெறலாம்.
  • 6 அடி தனிமனித இடைவெளியை மாணவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. கைகளை அடிக்கடி கழுவுதல், முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.பள்ளிகளில் எச்சில் துப்புவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.
  • கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதியில்லை, பெற்றோரின் ஒப்புதல் பெற்ற பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வந்து ஆசிரியரிடம் ஆலோசனை பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பள்ளிக்கு வரும் மாணவர்கள் பேனா,பென்சில்,அழிப்பான்,நோட்டுப் புத்தகம் உள்ளிட்டவற்றை  பகிர்ந்துக்கொள்ளக்கூடாது.
  • வகுப்பறைகளுக்குள் கொரோனாவை  தடுக்க பள்ளிகளில் வெவ்வேறு கால அட்டவணைகள் பின்பற்ற வேண்டும்.பள்ளிகளை தொடங்குவதற்கு முன்னர்  முழுவதுமாக சுத்தப்படுத்த வேண்டும்.பள்ளியில் உள்ள வருகைப் பதிவேட்டை தொடுதல் இல்லாத வகையில் பயன்படுத்த வேண்டும்.
  • பள்ளிகளில் கலை நிகழ்ச்சிகள்,வாழிபாடுகள்,விளையாட்டுகள், மாணவர்கள் கூடுதல் உள்ளிட்டவற்றை  கட்டாயம் தவிர்க்க வேண்டும்.பள்ளிகளில்  முடிந்த அளவு இயற்கையான காற்றைச் சுவாசிக்க வேண்டும். பள்ளிகளில் உள்ள நீச்சல் குளங்களை திறக்க அனுமதி கிடையாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

2030-ல் உலக கோப்பை… 30 லட்சம் நாய்களை கொல்ல மொராக்கோ அரசு ‘பகீர்’ திட்டம்! 

2030-ல் உலக கோப்பை… 30 லட்சம் நாய்களை கொல்ல மொராக்கோ அரசு ‘பகீர்’ திட்டம்!

ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…

2 hours ago

மகா கும்பமேளா நடைபெறும் பகுதியில் திடீர் தீ விபத்து!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…

2 hours ago

3 மணி நேரம் தாமதம்… இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் அமல்!

காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…

3 hours ago

தொடரும் வடகிழக்கு பருவமழை… தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…

4 hours ago

நாளை பரந்தூர் பயணம்.. தவெக தொண்டர்களுக்கு விஜய் ரகசிய உத்தரவு?

காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…

6 hours ago

“போர் நிறுத்தம் கிடையாது!” ஹமாஸுக்கு பதிலடி கொடுக்கப்படும்.! இஸ்ரேல் திட்டவட்டம்!

டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…

6 hours ago