இ-சிகரெட் விற்பனை செய்யும் 15 இணையதளங்களுக்கு சுகாதார அமைச்சகம் நோட்டீஸ்..!

e-cigarette

இ-சிகரெட் விற்பனை செய்யும் 15 இணையதளங்களுக்கு சுகாதார அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இ-சிகரெட்டுகளை விற்பனை செய்யும் 15 இணையதளங்களுக்கு தயாரிப்புகளின் விளம்பரம் மற்றும் விற்பனையை நிறுத்துமாறு, மத்திய சுகாதார அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ் பெறப்பட்ட 36 மணி நேரத்திற்குள் ஆன்லைன் நிறுவனங்கள் பதிலளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் நோட்டீஸ் அனுப்பப்பட்ட 15 ஆன்லைன் நிறுவனங்களில் நான்கு நிறுவனங்கள் பதிலளித்து தங்கள் செயல்பாடுகளை நிறுத்திவிட்டன. மீதமுள்ள தளங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை. பதிலளிக்க தவறினால் அந்த இணையதளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் எலக்ட்ரானிக் சிகரெட் தடைச் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆறு இணையதளங்கள் கண்காணிப்பில் உள்ளன. சமூக ஊடகங்களில் இ-சிகரெட்டுகளின் விளம்பரம் மற்றும் விற்பனையை அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், விரைவில் அவர்களுக்கு அறிவிப்புகளை வெளியிடலாம் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்