கொரோனா உள்ளவர்கள் குறித்த தகவல்களை அறிய பிரதமாரால் அறிமுகமப்படுத்தப்பட்ட ஆரோக்கியா சேது செயலி பாதுகாப்பானது என மத்திய தொழில்நுட்பத்துறை மந்திரி ரவி சங்கர் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தற்போது வரை தனது வீரியத்தை குறைத்து கொள்ளாமல் காண்பித்து வருகிறது. இதுவரை 3,822,989 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 265,084 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனவே இந்திய மக்கள் வெளியில் வருகையில் முக கவசத்துடனும், வெளியில் சென்று வீடு திரும்புகையில் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் எனவும் விழிப்புணர்வு கொடுக்கப்பட்டு வருகிறது. காவல் துறையினரும் தங்களால் முடிந்த முயற்சிகளை கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, பாதிக்கப்பட்டவர்கள் அருகாமையில் இருப்பதை கண்டறிதல் போன்ற சிறப்பு அம்சங்களுடன் கூடிய செயலியை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகபடுத்தினார்.
மேலும், மக்கள் அனைவரும் இதை தங்களது தொலைபேசியில் தரவிறக்கம் செய்து உபயோகிக்க வேண்டும் எனவும், தனியார் மற்றும் பொதுத்துறை அதிகாரிகள் நிச்சயமாக இந்த செயலியை மொபைலில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், தற்பொழுது மத்திய தொழில்நுட்பத்துறை மந்திரி ரவி சங்கர் அவர்கள் இந்த செயலியை குறித்து கூறுகையில், ஆரோக்கியா சேது செயலி மிகவும் பாதுகாப்பானது. இது இந்தியாவில் உருவாக்கப்பட்டது மட்டுமல்லாமல் வலுவான கட்டமைப்பு கொண்டது. கொரோனாவுக்கு எதிரான போரில் மிகவும் உதவும் என கூறியுள்ளார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…