மத்தியப் பிரதேசத்தில் ஒரு பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் தலைமை ஆசிரியர் எதிராக புகார் அளித்துள்ளனர்.
மத்தியப்பிரதேசத்தின் ராஜ்கரில் உள்ள ஒரு பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகள் பள்ளி சீருடை அணியாததற்காக பள்ளி தலைமை ஆசிரியர் கடந்த சனிக்கிழமை திட்டி உள்ளார். அப்போது தலைமை ஆசிரியர் மாணவிகளை நிர்வாணமாக பள்ளிக்கு வர சொன்னதாக மாணவிகள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், கடந்த சனிக்கிழமை பள்ளி சீருடை அணியாததற்காக தலைமை ஆசிரியர் திட்டினார்.
அதற்கு நாங்கள் பள்ளி சீருடை இன்னும் தைக்கப்படவில்லை என்று தெரிவித்தோம். ஆனால் அவர் எங்களை திட்டிக்கொண்டே இருந்தார். மேலும் மாணவர்களை ஈர்ப்பதற்காக இந்த ஆடைகளை அணிந்திருப்பதாகவும், மாணவர்களை ‘கெடுப்பது ‘ நாங்கள் தான் காரணம் என்றும் அவர் கூறினார்.
மேலும், தலைமை ஆசிரியர் எங்களை நிர்வாணமாக பள்ளிக்கு வருமாறு கூறினார், என்று மாணவிகள் கூறினர். பின்னர், பெற்றோர் தலைமை ஆசிரியரிடம் இது குறித்து கேட்டபோது பள்ளி சீருடை அணிந்து விதிகளை பின்பற்றுமாறு தான் கேட்டதாக தலைமை ஆசிரியர் கூறினார். இதனால், பள்ளி முதல்வருக்கு எதிராக மாணவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைதொடர்ந்து, தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டு அவரை பள்ளிக்கல்வித்துறை சஸ்பெண்ட் செய்துள்ளது.
சென்னை : தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனப் பருவமழை தொடங்கிய சமயத்திலேயே…
சென்னை : வயது முதிர்வு காரணமாக பிரபல மூத்த நடிகர் டெல்லி கணேஷ் (80) நேற்று இரவு காலமானார். சென்னையில்…
ரஷ்யா : ரஷ்யாவில் குறைந்து வரும் மக்கள் தொகையை சமாளிக்க புதிய அமைச்சகம் அமைக்க திட்டமிட்டு வருகிறார்கள். அதாவது,மூன்று ஆண்டுகளாக…
சென்னை : தவெக தலைவர் விஜய் மற்றும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானும் கசப்பை மறந்து மீண்டும் நட்பு பாராட்ட தொடங்கியுள்ளனர்.…
கிருஷ்ணகிரி :தமிழ்நாட்டில் இன்று (09-11-2024) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆம், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளியில் மதியம் 1.30 மணியளவில்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் (இரவு 10 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை…