ம.பி-யில் நேற்று முதல்வராக பதவியேற்பு..! முதல்வர் மோகன் யாதவின் அதிரடி உத்தரவு..!
மத்தியப் பிரதேச மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மோகன் யாதவை தேர்வு செய்யப்பட்டார். இவர், கடந்த சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசில் மோகன் யாதவ், கல்வித்துறை அமைச்சராக இருந்தார்.
இந்த நிலையில், நேற்று மத்திய பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக மோகன் யாதவ் பதவியேற்றார். ஜகதீஷ் தேவ்டா மற்றும் ராஜேஷ் சுக்லா துணை முதல்வர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கு ஆளுநர் மங்குபாய் சி.படேல் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்றத்தில் அத்துமீறல்.! தொடரும் கைது நடவடிக்கைகள்… ஒருவர் தப்பியோட்டம்.!
இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தின் முதலமைச்சராகப் பதவியேற்ற உடனேயே, டாக்டர் மோகன் யாதவ் மாநில அமைச்சரவையின் முதல் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மத மற்றும் பிற இடங்களில் பரிந்துரைக்கப்பட்ட தரத்தின்படி ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதை உறுதி செய்ய முடிவு செய்தார்.
மேலும், இந்த கூட்டத்தில் ஒலி மாசுபாடு மற்றும் சட்ட விரோதமாக ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படை அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும், பறக்கும் படையினர், மதம் மற்றும் பொது இடங்களை தவறாமல், அவ்வப்போது ஆய்வு செய்து, விதிமுறைகளை மீறினால், மூன்று நாட்களுக்குள் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.