ஆந்திராவில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் தனது பென்சிலை ஒருவன் திருடிவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த ஹனுமந்த் எனும் சிறுவன் ஒருவன் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த சிறுவன் நேற்று அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு சில மாணவர்களுடன் சென்று அதில் ஒரு மாணவன் தனது பென்சிலை திருடி விட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார். அதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த போலீசார், இருவரும் கைகுலுக்கி சமாதானம் செய்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
ஆனால் போலீசில் புகார் அளிக்க சென்றிருந்த சிறுவன் ஹனுமந்த் என்னுடைய பென்சிலை அவன் திருடி உள்ளான், எனவே அவன் மீது நீங்கள் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பிடிவாதமாக போலீசாரிடம் கூறியுள்ளார். அதற்கு போலீசார் வழக்கு பதிவு செய்தால் நீதிமன்றம், ஜாமீன் என பென்சில் திருடிய மாணவனின் பெற்றோர் அலைய வேண்டியிருக்கும் என கூறியுள்ளனர்.
இதனை அடுத்து ஹனுமந்த் சரி நான் அவன் பெற்றோரிடம் இது பற்றி பேசிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளான். சிறுவனின் இந்த செயலை கண்டு மெய்சிலிர்த்த போலீசார் அவனை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஒன்றாம் வகுப்பு படிக்க கூடிய சிறுவனின் இந்த புத்தி கூர்மை பலரையும் வியக்க வைத்துள்ளது.
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல்…
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…