டெல்லி சோனியா காந்தி இல்லத்தில், காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இந்த கூட்டத்தில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும், காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ராஜஸ்தான் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், அக்கூட்டத்தில் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘இந்த நாட்டைக் காக்க,எவ்வித சமரசமும் இல்லாமல்,ஆர்எஸ் எஸ்/பாஜகவை எதிர்த்துப் போராட தலைவர் ராகுல்காந்தியால் மட்டுமே முடியும். இந்த தேசத்தின் ஆன்மாவை அதற்குரிய அத்தனை மகத்துவத்தோடும் புரிந்துகொண்டுள்ள தலைவர் அவர். காங்கிரஸ் கட்சியின் தலைவராக அவர் உடனே பொறுப்பேற்க வேண்டும்.
எவ்வளவு தோல்விகள் வந்தாலும், துணிச்சலோடு களத்தில் நின்று,போராடி வெல்பவரே உண்மையான தலைவர்.அப்படிப்பட்ட கொள்கை உறுதியும்,மக்கள் மீது மாறாத அன்பும், துணிச்சலும் மிகுந்த தலைவர் ராகுல்காந்தி.அவரது தலைமையில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெறுவது உறுதி.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை…
டெல்லி : ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அங்கு மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 15…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு…
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…