தன் தலை முடியை தானமாக கொடுத்த கேரளா பெண் அதிகாரி..! எதற்கு தெரியுமா ..?

கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்த அபர்ணா லவகுமார். இவர் சிவில் பெண் காவல் அதிகாரியாக உள்ளார். கேரளா பெண்களுக்கு முடியே தனி அழகுதான். அபர்ணாவிற்கு தலை முடி முழங்கால் வரை இருக்கும்.
இந்நிலையில் தன்னுடைய தலை முடியை புற்றுநோயாளிகளுக்கு காணிக்கையாக அளித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் அதிகாரி அபர்ணா கூறுகையில், ஹீமோதெரபி சிகிச்சைக்கு பின்னர் தலைமுடி இல்லாமல் வாடும் புற்றுநோயைகளை பார்த்த பிறகுதான் இந்த முடிவு செய்தேன்.
புற்று நோயால் பாதிக்கப்படும் குழந்தைகள் உடன் படிக்கும் மற்ற குழந்தைகள் கிண்டல் செய்கிறார்கள். இதனால் அந்த குழந்தைகள் மனம் உடைந்து போகிறார்கள். அவர்களுக்காகத் தான் இந்த முடிவு என கூறினார்.
பெண் அதிகாரி அபர்ணாவின் இந்த செயலுக்கு காவல்துறை மற்றும் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025