நிவாரண நிதியை காலால் வழங்கிய மாற்றுத்திறனாளி !நெகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட கேரள முதல்வர்

Default Image

கேரளாவுக்கு நிவாரண நிதி வழங்கிய பிரனாவ் என்ற மாற்றுத்திறனாளி சிறுவனை  முதல்வர் பினராயி விஜயன் பாராட்டியுள்ளார்.
கேரள மாநிலம் இயற்கை பேரிடரான புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது.அந்த சமயத்தில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் முதல்வரின் நிவாரண நிதிக்கு மக்கள் தாராளமாக நிதியை வழங்கலாம் என்று தெரிவித்தார்.இந்த நிலையில் பிரணவ் என்ற இளைஞர் நிவாரண நிதி வழங்குவதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்தார்.


இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை கேரள முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.இந்த புகைப்படத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அவரது பதிவில்,இன்று காலை ஆலந்துறை சேர்ந்த பெயிண்டர் பிரணவ் என்பவர் சந்தித்தார்.இந்த சந்திப்பு இதயத்தை தொடும் சந்திப்பு ஆகும்.மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவு அளித்து வரும் கேரள அரசு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார் பிரணவ்.  இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்