சமீபத்தில் பிரபல ரவுடி விகாஸ் துபே என்கவுண்டர் செய்யப்பட்டார். விகாஸ் துபே மனைவி நேற்று கூறுகையில், தனது கணவர் குற்றத்தின் பாதையை விட்டு வெளியேற முயற்சிக்கவில்லை என்று கூறினார், இப்போது அவர் இறந்துவிட்டதால் குடும்பம் மிகுந்த சோகத்தில் உள்ளது.
பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை விகாஸ் துபே வாங்கியதாகக் கூறப்படுவது குறித்து கூறிய விகாஸ் துபே மனைவி, “அந்த செய்தி போலி ” என்றும், கணவர் தங்களைத் தற்காத்துக் கொள்ள குடும்பத்தை விட்டு வெளியேறி விட்டார் என்றும் கூறினார்.
அவர் எங்களுக்காக எதையும் விடவில்லை. அவர் ரூ.500 கோடி மதிப்புள்ள சொத்தை விட்டுவிட்டு சென்றுள்ளார் என்று மக்கள் கூறலாம், ஆனால் உண்மை என்னவென்றால் என்னிடம் எதுவும் இல்லை, என துபே மனைவி ரிச்சா துபே ஒரு தொலைக்காட்சி செய்தி சேனலிடம் தெரிவித்தார்.
சற்று யோசித்துப் பாருங்கள், ஒரு நபருக்கு கோடி கணக்கில் மதிப்புள்ள சொத்து இருந்தால், அவரது மனைவி லக்னோவில் 1,600 சதுர அடி வீட்டில் வசிப்பாரா.? என விகாஸ் துபே மனைவி ரிச்சா துபே கூறினார்.
மேலும், பிக்ரு கிராமத்தில் தனது மாமியார் இருக்கும் இடத்தின் சூழ்நிலை தனக்கு பிடிக்கவில்லை என்றும், தனது குழந்தைகளை குற்ற உலகத்திலிருந்து விலக்கி வைப்பதற்காக, கடந்த 2008-ஆம் முதல் லக்னோவில் வாழத் தொடங்கினார் என்றும் போலீஸ்காரர்களைக் கொல்லும் திட்டத்தைப் பற்றி விகாஸ் என்னிடம் கூறியிருந்தால், அவரைத் தடுக்க நான் எல்லா முயற்சிகளையும் செய்திருப்பேன் என்று அவர் கூறினார்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…
கேரளா : பராசலாவை அடுத்த மூறியன்கரை பகுதியை சேர்ந்த இளைஞர் ஷாரோன் ராஜ் என்பவருக்கு அவரை காதலித்து வந்த கிரிஷ்மா கடந்த…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து அப்பகுதியில் 2வது விமான நிலைய முனையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய…