புதிய பி.வி.சி ஆதார் கார்டை வாங்கிவிட்டீர்களா.? இதை செய்தால் போதும் வீடு தேடி வரும்.!

Published by
பாலா கலியமூர்த்தி

புதிய வகையிலான PVC ஆதார் அட்டைகளை வாங்கிவிட்டீர்களா? அதனை எப்படி வாங்குவது என்பது குறித்து காணலாம்.

இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. நாம் இந்திய குடிமகன் என்ற அடையாளத்தை ஆதார் அட்டை வழங்குகிறது. இதன்மூலம் வாக்காளிப்பது, வங்கிக் கணக்கு தொடங்குவது, போன்ற எண்ணற்ற நடைமுறைகளுக்கும் ஆதாரமாக பயன்படுத்தி வருகின்றோம். இந்த ஆதார் அட்டைகளை வழங்கும் UIDAI நிறுவனம், சமீபத்தில் புதிய வகையிலான PVC ஆதார் அட்டைகளை அறிமுகப்படுத்தியது.

முதன் முதலில் வழங்கப்பட்ட ஆதார் கார்டு காகிதத்தால் ஆனது. தற்போது இந்த கார்டு பலரிடம் கிழிந்து போயும், அதிலுள்ள விபரங்கள் தெரியமாலும் உள்ளது.  புதிதாக அறிமுகமாகியுள்ள ஆதார் பி.வி.சி கார்டில், டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட பாதுகாப்பான கியூஆர் குறியீடு, ஹாலோகிராம், கோஸ்ட் படம், கில்லோச் முறை டிஜிட்டல் சைன், உள்ளிட்ட பல பாதுகாப்பு சிறப்பம்சங்களை கொண்டது. கிரேடிட் கார்டுகள் போல எளிதாக எங்கு வேண்டுமாலும் வைத்து கொள்ளலாம்.

இதனை பெற UIDAI அமைப்பின் அங்கீகாரப்பூர்வமான வலைத்தளத்திற்கு சென்று, ரூ.50-ஐ கட்டணமாக செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். ஸ்மார்ட் சைஸ் பாலிவினைல் குளோரைடு (பிவிசி) செயற்கை பிளாஸ்டிக் பாலிமர் அட்டையில் ஆதார் கிடைக்கிறது. அதன்படி, சில எளிய முறையில் நீங்கள் ஆதார் பி.வி.சி கார்டை ஆர்டர் செய்யலாம். பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் ஆதார் பி.வி.சி கார்டை ஆர்டர் செய்ய நீங்கள் பின்பற்றக்கூடிய வழிமுறைகளை இங்கே காணலாம்.

முதலில் ஆதார்கார்டின் UIDAI வலைத்தளமான https://residentpvc.uidai.gov.in/order-pvcreprint என்ற வலைதளத்தில் உள்ளே செல்லவும். முகப்பு பக்கத்தில், ஆதார் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து கெட் ஆதார் பிரிவின் கீழ், ஆர்டர் ஆதார் பி.வி.சி கார்டு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் 12 இலக்கங்கள் ஆதார் எண் அல்லது 16 இலக்க மெய்நிகர் ஐடி / 28 இலக்க ஈஐடி எண்ணனை பதிவு செய்யவும். பாதுகாப்பு குறியீடு அல்லது கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு சென்ட் ஓடிபி (Send OTP) என்பதைக் கிளிக் செய்க.

நீங்கள் பதிவுசெய்த மொபைல் எண்ணில் நீங்கள் பெற்ற ஓடிபியை (OTP) உள்ளிடவும். விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் சரிபார்த்து சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். கடைசியாக, கட்டண விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து தேவையான தொகையை செலுத்துங்கள். உங்கள் கட்டணம் முடிந்ததும், ஐந்து வேலை நாட்களுக்குள் புதிய ஆதார் கார்டு ஸ்பீட் போஸ்ட் மூலம் வீட்டிற்கு வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மூடநம்பிக்கையை ஒழிக்க சிறப்பு சட்டம் கொண்டுவரப்படுமா? அமைச்சர் ரகுபதி சொன்ன பதில்!

மூடநம்பிக்கையை ஒழிக்க சிறப்பு சட்டம் கொண்டுவரப்படுமா? அமைச்சர் ரகுபதி சொன்ன பதில்!

சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி  தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.…

35 minutes ago

கோவை த.வெ.க பூத் கமிட்டி கருத்தரங்கு – விஜய் பங்கேற்பு.!

கோவை : கோவையில் வரும் 26, 27ம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற…

2 hours ago

குடும்பத்துடன் இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்.!!

டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வான்ஸ் ஆகியோர் காலை 10 மணி…

2 hours ago

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பலமாக இருப்பதாக திருமாவளவன் சொல்லிவிட்டார்.. – தமிழிசை பேச்சு!

சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…

2 hours ago

live : அரசியல் நிகழ்வுகள் முதல்…பெல்ஜியம் ரேஸிலும் அசத்திய அஜித் குமார் அணி வரை!

சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…

3 hours ago

திரும்பி பார்முக்கு வந்த ஹிட் மேன்! ரோஹித் ஷர்மாவை புகழ்ந்து தள்ளிய வீரர்கள்!

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…

4 hours ago