எச்சரிக்கை ..! உங்கள் வங்கி கணக்கில் 5 லட்சம் உள்ளதா ? நீங்கள் அதை இழக்க நேரிடும்

Default Image

வங்கி முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான  முதலீட்டுகளில்  ஒன்று வங்கி எஃப்.டி (நிலையான வைப்பு) ஆகும்.

இதை இன்னும் துல்லியமாகச் சொல்ல வேண்டும் என்றால் குறுகிய கால முதலீட்டாளர்களுக்கு மிகவும் பிரபலமான முதலீட்டு விருப்பங்களில் ஒன்று வங்கி எஃப்.டி.ஆனால் நிபுணர்களின் ஆலோசனையின் படி,வங்கி முதலீட்டாளர்கள் பணத்தை இழக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளனர்.

ரூ .5 லட்சத்துக்கு மேல் பெற முடியாது :

அண்மைக்காலமாக சில வங்கிகள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி வருகின்றன.ஆகவே ஒரு முதலீட்டாளர் ரூ.5 லட்சத்துக்கும் அதிகமான தொகையை பெற திட்டமிட்டால்,அத்தகைய முதலீட்டாளர்கள் வங்கிக்கு   நிதி நெருக்கடி ஏற்படும் நிலை ஏற்பட்டால் ரூ .5 லட்சத்துக்கு மேல் பெற முடியாது.ஆம், அவர்களுக்கு ரூ.5 லட்சம் மட்டுமே கிடைக்கும், அதற்கு மேல் கிடைக்க வாய்ப்பு இல்லை.இது குறித்து முதலீட்டு நிபுணர்கள் கூறுகையில், வங்கி வைப்புத்தொகையாளரின் பணத்தில் ரூ.5 லட்சம் வரை மட்டுமே காப்பீடு செய்யப்படுகிறது என்று கூறியுள்ளனர்.

எது சிறந்தது ?

எனவே , இந்திய அஞ்சல் துறையின் முதலீடு மத்திய அரசால் ஆதரிக்கப்படுவதால் ,வங்கி நிலையான வைப்புத்தொகைக்கு பதிலாக அஞ்சல் அலுவலக நிலையான வைப்புத்தொகையில் முதலீட்டு செய்ய நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மக்கள் விரும்புவது எதை ? முதலீட்டு நிபுணர் பல்வந்த் ஜெயின் கருத்து :

மும்பையைச் சேர்ந்த  முதலீட்டு நிபுணர் பல்வந்த் ஜெயின், “வங்கி வைப்பு விஷயத்தில், ஒருவரின் பணம் ரூ .5 லட்சம் வரை பாதுகாக்கப்படுகிறது. இருப்பினும், வங்கி நிதி நெருக்கடி ஏற்படும் ஆகும் பட்சத்தில், வைப்புத்தொகை ரூ .5 லட்சத்திற்கு மேல் பணத்தை பெற முடியாது. பாதுகாப்பை பொருத்தவரை ,அஞ்சல்த்துறையின் எஃப்.டி வங்கி எஃப்.டி.யை விட சிறந்தது. ஆனால் அஞ்சல்த்துறையை விட வங்கிகள் சிறந்த சேவையை வழங்குவதால் மக்கள் வங்கி எஃப்.டி.யை விரும்புகிறார்கள்.

முதலீட்டு நிபுணர் ஜிதேந்திர சோலங்கி கருத்து :

டெல்லியைச் சேர்ந்த  முதலீட்டு நிபுணர் ஜிதேந்திர சோலங்கி அஞ்சல் துறை குறித்து கூறுகையில், “சிறு முதலீட்டாளர்களுக்கு, 3 மற்றும் 5 ஆண்டுகளுக்கு நிலையான வைப்பு மிகவும் பிரபலமானது. அத்தகைய முதலீட்டாளர்களுக்கு,பணத்தின்  பாதுகாப்பு என்பது மிக முக்கியம். அதே நேரத்தில், அவர்கள் 1.4 சதவிகித கூடுதல் வருவாயையும் பெறுகிறார்கள்.

எனவே, ஒரு நிலையான வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள முதலீட்டாளர்களுக்கு, வங்கியின் நிதி நெருக்கடி நிலை குறித்து கவலைப்பட்டால், அஞ்சல்த் துறையின் எஃப்.டி சிறந்த தேர்வாக இருக்கும். ஒரு முதலீட்டாளர் 5 வருட வங்கி எஃப்.டி காலத்திற்கு முதலீடு செய்ய நினைத்தால் ,அஞ்சல்த் துறை எஃப்.டி 6.7 சதவீதம் வரை கிடைக்கும். தனியார் மற்றும் பிற பொது வங்கிகளில் இது 5.3 சதவீதம் முதல் 5.35 சதவீதம் வரை கிடைக்கும்.

நன்றி : ஜீ நியூஸ் 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்