வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட மாடுகள்.. பதறவைக்கும் காட்சிகள்.!
தெலுங்கானா : கொமரம் பீம் ஆசிபாபாத் மாவட்டத்தில் உள்ள காகஸ்நகர் மண்டலத்தில் உள்ள அந்தேவெல்லி என்ற இடத்தில் பெத்தவாகு ஆற்றங்கரையில் நேற்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வெள்ளத்தில் ஆண்டவெல்லியில் உள்ள நூற்றுக்கணக்கான கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளம் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு கால்நடைகளை இழுத்து சென்றது, இருந்தாலும் கால்நடைகள் பாதுகாப்பாக கரைக்கு ஒதுங்கியது.
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ததால், ஆற்றை கடக்கும் போது திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஏராளமான கால்நடைகள் ஆற்றில் நீந்துவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
The cattle crossing the Andhavelli river, unfortunately river water levels increased and cattle washed away in Khagaznagar mandal in kumrambheem Asifabad district.#telangana @XpressHyderabad @NewIndianXpress pic.twitter.com/JWCKz4Q9P2
— TNIE Raju reddy (@rajareddy_TNIE) June 28, 2024
இந்த சம்பவத்தின் வீடியோவில், ஓடையில் மேல் நீர் பரப்பு பகுதிகளில் இருந்து வரும் தண்ணீரில் கால்நடைகள் போராடுவதைக் காட்டுகிறது.