ஹத்ராஸ் பெண்ணின் உடலை நள்ளிரவில் எரித்த சம்பவம், மனித உரிமை மீறலாகும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யபட்டு உயிரிழந்தார். இந்த இளம்பெண்ணின் உயிரிழப்பிற்கு பலர் கண்டனங்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக சிபிஐயை விசாரிக்க உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பரிந்துரை செய்தார். அதன்படி, ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்த வழக்கினை தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது.அந்த வகையில் நடைபெற்ற விசாரணையில் ,எனவே பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். பெண்ணின் உடலை போலீசார் உரிய மரியாதைகள் இன்றி அவசரம் அவசரமாக தகனம் செய்தது மனித உரிமை மீறலாகும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…