ஹாத்ரஸ் பாலியல் வன்கொடுமை ! உ.பி. அரசு இதற்கான பதில்களைக் அளிக்க வேண்டும் – பிரியங்கா காந்தி
ஹாத்ரஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரியங்கா காந்தி அரசுக்கு 5 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
உயிரிழந்த செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற இரண்டு நாள்கள் முன் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்ற போது, போலீசார் அவர்களை கைது செய்து, பின்னர் விடுதலை செய்தனர்.இதைத்தொடர்ந்து, நேற்று மீண்டும் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஹத்ராஸ் சென்றனர். ஆனால், டெல்லி-நொய்டா சாலையில் இருந்த போலீசார் இவர்களை தடுத்து நிறுத்திய உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை சந்திக்க 5 பேருக்கு மட்டுமே அனுமதி என கூறினர்.
பின்னர், ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட 5 பேர் செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில், உயிரிழந்த இளம் பெண்ணின் வீட்டிற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட 5 பேர் சென்றனர்.அங்கு அந்த குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்கள்.இந்நிலையில் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் உத்திர பிரதேச அரசுக்கு 5 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
1.இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மூலம் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
2. ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் மற்றும் எந்த பெரிய பதவியும் வழங்கக்கூடாது.
3. எங்களிடம் கேட்காமல் எங்கள் மகளின் உடல் ஏன் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது?
4. நாங்கள் பேசும் வார்த்தை தவறாக மாற்றப்பட்டு , ஏன் மிரட்டப்படுகிறோம் ?
5.இறுதிச்சடங்கிற்கு மலர்மாலை வாங்கினோம், ஆனால் இறந்த உடல் எங்கள் மக்களின் உடலா ? இதை நாங்கள் எப்படி நம்புவது ? என்று பதிவிட்டுள்ளார்.இந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் பெற பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு உரிமை இருக்கிறது , உ.பி. அரசு இதற்கான பதில்களைக் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
5. हम इंसानियत के नाते चिता से फूल चुनकर लाए मगर हमें कैसे माने कि यह शव हमारी बेटी का है भी या नहीं?
इन प्रश्नों के उत्तर पाना इस परिवार का हक है और उप्र सरकार को ये जवाब देना पड़ेगा। 2/2
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) October 3, 2020