ஹத்ராஸ் வழக்கு.. 3 நாட்களுக்கு பிறகு ஊடகங்களுக்கு அனுமதி..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
ஹத்ராஸ் மாவட்டத்தை சார்ந்த 19 வயதான இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பலத்த காயங்களுடன் பதினைந்து நாட்கள் டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 29 அன்று சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், அந்த இளம் பெண் கிராமத்திற்குள் ஊடகங்களை நுழைய மாவட்ட நிர்வாகம் அனுமதி வழக்கமால் இருந்த நிலையில், இறுதியாக இன்று ஊடகங்களுக்கு அனுமதி வழக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 1 முதல் ஊடகங்கள் கிராமத்திற்குள் செல்லவோ அல்லது குடும்ப உறுப்பினர்களை சந்திக்கவோ அனுமதிக்கப்படவில்லை. புல்கடி கிராமத்தின் நுழைவாயிலில் காவல்துறையினரும் நிறுத்தப்பட்டனர்.
ஊடகங்களுடன் பேசிய அதிகாரி ஒருவர், கிராமத்தில் அவர்களின் விசாரணை முழுமையாக அல்லது ஓரளவு நிறைவடைந்துள்ளது. கிராமத்திற்குள் ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகள் இப்போது நீக்கப்பட்டுள்ளன. இப்போது ஊடகங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. பிரதிநிதிகளை அனுமதிக்க உத்தரவுகள் வரும்போது, அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்.
உயிரிழந்த குடும்ப உறுப்பினர்கள் தொலைபேசிகள்பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவர்களை வீடுகளில் அடைத்து வைத்ததாகவும் வெளியான அனைத்து குற்றச்சாட்டுகளும் முற்றிலும் ஆதாரமற்றவை என்று கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
18 நாட்கள் 36 கதாபாத்திரங்கள்.. நாளை முதல் மோகன் லால் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் அப்டேட்.!
February 8, 2025![L2E EMPURAAN](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/L2E-EMPURAAN.webp)
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! கெஜ்ரிவால் தோல்வி., மணீஷ் சிசோடியா தோல்வி!
February 8, 2025![Arvind Kejriwal - Manish sisodia](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Arvind-Kejriwal-Manish-sisodia.webp)