என்னது கோவாவில் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டதா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த புள்ளி விவரம்!
கோவாவில் சுற்றுலாப் பயணிகளின் வருகை சாதனை அளவில் அதிகரித்துள்ளது என கோவா சுற்றுலா வாரியம் பரவி வரும் வதந்திகளுக்கு அதிரடியான முற்றுப்புள்ளியை வைத்துள்ளது.
கோவா : கடந்த சில வாரங்களாக சமூக ஊடகங்களில் “கோவா செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது” என்று பரபரப்பட்டு வரும் தகவல்களுக்கு அதிரடியான முற்றுப்புள்ளி வைக்கப்படும் வகையில், கோவாவின் வருமானம் கடந்த ஆண்டு அதற்கு முந்தைய ஆண்டை விட அதிகமாக வந்துள்ளதாக அதற்கான புள்ளி விவரம் வெளி வந்துள்ளது.
கோவா சுற்றுலாப் பயணிகளின் வருகையில் கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது, ஹோட்டல்கள் முழுவதும் புக்கிங் ஆன நிலையில், புதிதாக புக்கிங் செய்ய முடியாத அளவுக்கு இருக்கிறதாம். கடற்கரைகளும் மக்கள் கூட்டங்களால் நிரம்பி உள்ளது, மேலும் கோவா முழுவதும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது எனவும் சுற்றுலா துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவாவில் இரவு நேரங்களில் வாழ்க்கை எப்போதும் போல, கலாட்டா, அஞ்சுனா மற்றும் கலங்குட் போன்ற பிரபல இடங்களிலும் துடிதுடிப்பாக செயல்பட்டு கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். இதன் மூலம், கோவா சுற்றுலா துறை தொடர்ந்து வளர்ச்சி அடைந்துள்ளது மற்றும் புதிய பகுதிகள் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிகமாக வருகிறார்கள் என்பது தெரிகிறது.
வதந்திகளுக்கான காரணம்
இருப்பினும், பொங்கல் பண்டிகை வருகிறது எனவே, கோவாவிற்கு பலரும் வருகை தருவதை கெடுக்கும் வகையில், இப்படியான தகவல் பரவ முக்கிய காரணமே China Economic Information Center எனப்படும் அமைப்பின் சர்வே ஒன்றுதான் என சொல்லப்படுகிறது. இதன் மூலம் சர்வே எடுக்கப்பட்டு அதில், கோவாவிற்கு வருகை தருபவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக வேண்டுமென்றே வதந்தி பரப்பியதும் தெரியவந்துள்ளது.
இந்த தவறான தகவல்கள், கோவாவின் கடற்கரைகளும் தெருக்களும் காலியாக இருப்பது மற்றும் விமான மற்றும் ஹோட்டல் செலவுகள் அதிகமாக இருக்கின்றன என்று பரப்பப்பட்டன. ஆனால், இரு தகவல்களும் பொய்யானவை என்றும், சரியான புள்ளிவிவரங்களின் மூலம் அது நிரூபிக்கப்பட்டுள்ளது.
உண்மையான ரிப்போர்ட்
கோவாவின் சுற்றுலா துறை இன்னும் செழிப்பாகவே இருக்கின்றது என்பதை உண்மையிலேயே நிரூபிக்கும் ஒரு முக்கிய உதாரணம் 2024 டிசம்பர் மாதத்தில் கோவா மாநிலம் பெற்ற அசத்தலான வருமானமாகும். ஏனென்றால், கடந்த 2023 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, 2024 இல் கோவா ரூ.75.51 கோடி கூடுதல் வருமானத்தை சுற்றுலாத்துறை மூலம் ஈட்டியுள்ளது.
2024 ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரை காலகட்டத்தில், கோவா மொத்தமாக ரூ.4614.77 கோடியின் வருவாயை ஈட்டியுள்ளது. இது 2023 ஆம் ஆண்டின் அதே காலத்துடன் ஒப்பிடும் போது, ரூ.365.43 கோடி அதிகமாக உள்ளது. இதில் ஜிஎஸ்டி வருவாயில் 9.62% மற்றும் VAT வசூலில் 6.41% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என இந்த விவரத்தை கோவா சுற்றுலா வாரியம் (Goa Tourism Development Corporation) கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வருமான வளர்ச்சி, கோவாவின் சுற்றுலா துறையின் செழிப்பு மற்றும் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் முக்கிய அடையாளமாகும். இதன் மூலம் கோவாவில் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக பரவும் தகவலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.