ஆரஞ்சு நிறத்துக்கு மாறியதா? வந்தே பாரத் ரயில்… வெளியான தகவல்.!

orange vb

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் நிறம் வெள்ளை மற்றும் நீல நிறத்திலிருந்து மாற்றப்படவுள்ளதாக தகவல்.

இந்தியாவின் மிக வேகமான அதிவிரைவு ரயில் எனப்படும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 26 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாட்டில் இயக்கப்படுகின்றன. வெள்ளை மற்றும் நீல நிறத்தில் இருக்கும் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் விரைவில் நிறம் மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக இந்தியாவில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும் இன்டக்ரல் கோச் பேக்டரியில் (ICF), பல்வேறு நிறங்களை முயற்சி செய்து பார்த்ததாகவும் ஆரஞ்சு மற்றும் சாம்பல் நிறங்கள் பொருத்தமானதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளன, ஆனால் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவேளை ரயில் முழுவதும் ஆரஞ்சு நிறத்திலும் அல்லது ரயில் பெட்டிகள் ஆரஞ்சு நிறத்திலும், கதவுகள் சாம்பல் நிறத்திலும் இருக்கலாம் என்று ரயில்வே வட்டார தகவல் தெரிவிக்கிறது. ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்த பிறகு, புதிய வண்ண முறை வந்தே பாரத்தின் எதிர்கால ரயில்களில் பயன்படுத்தப்படும் என்று ஒரு அதிகாரி கூறினார்.

பெரும்பாலும் ஆரஞ்சு நிறம் அடங்கிய வண்ணக்கலவையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, வெள்ளை மற்றும் நீல நிறத்தில் இருப்பதால், சீக்கிரம் அழுக்கடைந்து வருவதாலும்,  அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியிருப்பதால் நிறம் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்