சீனா இந்தியாவின் எல்லைப்பகுதியை ஆக்கிரமித்துள்ளதா ? ராகுல் காந்தி கேள்வி
சீனாவின் ஆக்ரோஷத்துக்கு எதிராக நாம் அனைவரும் ஒற்றுமையாக நிற்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
லடாக் எல்லையில் இந்தியா- சீனா இடையே எல்லைப் பிரச்சினை உள்ளதால் இரு நாடுகளின் படைகள் கடந்த சில நாட்களாக குவிக்கப்பட்டது.இதனிடையே கடந்த ஜூன் 15 -ம் தேதி(அதாவது திங்கட்கிழமை) இந்தியா- சீனா வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில், இந்தியா வீரர்கள் 20 வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 40 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இந்த மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையில் பதற்றம் அதிகரித்துள்ளது.தொடர்ந்து நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,சீனாவின் ஆக்ரோஷத்துக்கு எதிராக நாம் அனைவரும் ஒற்றுமையாக நிற்க வேண்டும்.சீனா இந்தியாவின் எல்லைப்பகுதியை ஆக்கிரமித்துள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பதிவிட்டுள்ள புகைப்படம் அவரது தந்தையும் ,முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி எடுத்த புகைப்படமும் ஆகும்.