காங்கிரஸ்க்கு சரியான பதிலடி கொடுத்த – அரியானா மாநில அமைச்சர்
- “எங்களுக்கு பிடித்தது இருந்ததால் தான் நாங்கள் எங்கள் பெயருக்கு முன் (சவுகிதார்) என்னும் பெயரை சேர்ந்துகொண்டோம்”.
- உங்கள் பெயர்களுக்கு முன்னால் “பப்பு” என்ற அடைமொழியை சேர்த்துக் கொள்வதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது.இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரபேல் ஒப்பந்த விவகாரம் குறித்து குற்றம் சாட்டினார்.மேலும் “காவலாளி ஒரு திருடன்” என விமர்சனம் செய்து வந்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக “நானும் காவலன் தான்”என்ற பிரசார வீடியோவை வெளியிட்டார்.
மேலும் அந்த வீடியோவில் ‘‘உங்கள் காவலன் தேசத்துடன் துணை நிற்கிறார். ஊழல் மற்றும் சமூக கொடுமைகளை எதிர்த்து யாரெல்லாம் போராடுகிறார்களோ அவர்கள் எல்லோரும் காவலன்தான்’’ என கூறி இருந்தார்.
மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது பெயரை (சவுகிதார்) “காவலன் நரேந்திர மோடி” என மாற்றம் செய்துள்ளார்.
இந்நிலையில் பா.ஜ.க தலைவர் அமித் ஷா மற்றும் பல்லாயிரக்கணக்கான பா.ஜ.க முக்கிய நிர்வாகிகள் தங்களது டுவிட்டர் கணக்குகளில் தங்களது பெயர்களுக்கு முன்னால் “காவலாளி” (சவுகிதார்) என்ற பெயரை சேர்த்துக்கொண்டனர். இதை காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கேலி , கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பா.ஜ.க-வை சேர்ந்த அரியானா மாநில அமைச்சர் அனில் விஜ் தனது டுவிட்டர் பக்கத்தில்”எங்களுக்கு பிடித்தது இருந்ததால் தான் நாங்கள் எங்கள் பெயருக்கு முன் (சவுகிதார்) என்னும் பெயரை சேர்ந்துகொண்டோம்” என பதிலடி கொடுத்துள்ளார்.