ஹரியானா: 1 முதல் 3 ஆம் வகுப்புகளுக்கு செப்.20 முதல் பள்ளிகள் திறப்பு..!

Published by
Sharmi

ஹரியானா மாநிலத்தில் 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 20 முதல் பள்ளிகள் திறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா அலையில் சிக்கி தவித்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனை அடுத்து ஆன்லைன் வகுப்புகளை மாணவர்களுக்கு கடைபிடித்து வந்த நிலையில், கொரோனாவின் தாக்கம் சற்று குறைய தொடங்கியவுடன் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து வருகிறது.

ஹரியானா அரசு செப்டம்பர் 20 முதல் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளைத் திறக்கவுள்ளது. இதன் வகுப்புகள் கண்டிப்பாக கொரோனா நெறிமுறையைப் பின்பற்றி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானாவில் முதலில் ஜூலை 16 முதல் 9-12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டன.  பின்னர், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூலை 23 அன்று பள்ளிகள் தொடங்கப்பட்டது. அதே நேரத்தில் 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இப்போது 1 முதல் 3 வரை உள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் செப்டம்பர் 20 அன்று திறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், பெற்றோரிடமிருந்து முன் அனுமதி கடிதம் பெற்று வரும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு மாணவருக்கும் வெப்பப்பரிசோதனை செய்யப்படும். சாதாரண வெப்பநிலைக்கு மேல் இருக்கும் மாணவர்கள் யாரும் பள்ளி வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளது.

Recent Posts

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…

19 minutes ago
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

57 minutes ago
டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

2 hours ago
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

3 hours ago
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

3 hours ago
அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

4 hours ago