ஹரியானா: ரூ. 561.11 கோடி பயிர் சேத இழப்பீடு வழங்க அரசு ஒப்புதல்..!

கனமழை, மற்றும் பூச்சி தாக்குதல் போன்றவற்றால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு ரூ.561.11 கோடி பயிர் சேத இழப்பீடு வழங்க ஹரியானா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மாநிலத்தில் கனமழை, நீர் தேக்கம் மற்றும் பூச்சி தாக்குதல்களால் பருத்தி, நிலவேம்பு, நெல், மற்றும் கரும்பு ஆகிய பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு பயிர் சேத இழப்பீடு வழங்க ஹரியானா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, ஹிசார் மாவட்டத்திற்கு ரூ.172.32 கோடி, பிவானிக்கு ரூ.127.02 கோடி, ஃபதேஹாபாத்துக்கு ரூ.95.29 கோடி, சிர்சாவுக்கு ரூ.72.86 கோடி, சர்க்கி தாத்ரிக்கு ரூ.45.24 கோடி, ஜஜ்ஜாருக்கு ரூ.24.51 கோடி, சோனிபட்டிற்கு ரூ.10.45 கோடி, ரோஹ்தக்கிற்கு ரூ.58.28 லட்சம், பல்வால் மாவட்டத்திற்கு ரூ.58.28 லட்சம், நூஹ்வுக்கு ரூ.52.05 லட்சம், கர்னால் மாவட்டத்திற்கு ரூ.3.78 லட்சம் என மொத்தம் ரூ.561.11 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு நியாயமான இழப்பீடு வழங்கும் வகையில், பயிர் இழப்பீட்டுத் தொகையை ஏக்கருக்கு ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தி முதல்வர் அண்மையில் அறிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025