Haryana:விவசாயிகள் மீது போலீசார் தடியடி – அரசியல் தலைவர்கள் கண்டனம்..!

Default Image

ஹரியானாவின் கர்னல் பகுதியில் பஸ்தாரா சுங்கச்சாவடியில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலீஸார் தடியடி தாக்குதல் நடத்தியதில் 10க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர்.

மத்திய அரசு கடந்த ஆண்டு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது.ஆனால்,இதற்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

போராட்டம்:

குறிப்பாக,தலைநகர் டெல்லியில் கடந்த எட்டு மாதங்களாக ஹரியானா,பஞ்சாப்,உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் முகாமிட்டு மழை,வெயில் பாராமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதனால்,உச்சநீதிமன்றம் இந்த பிரச்சனையில் தலையிட்டு,மத்திய அரசிடம் வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில்,ஹரியானாவின் கர்னல் பகுதியில் பாஜக கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் கலந்து கொள்ள இருந்தார்.

இதற்கிடையில்,ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் உள்ளாட்சி தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அமைதியான முறையில் ஆர்பாட்டம்:

அதன்படி,வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக,ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் கலந்து கொள்ளும் பாஜக கூட்டத்திற்கு எதிராக அமைதியான போராட்டத்தை நடத்த விவசாயிகளின் அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்ததையடுத்து,கர்னல் பகுதி அருகே உள்ள பஸ்தாரா சுங்கச்சாவடியில் விவசாயிகள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது,நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்ததாக கூறி விவசாயிகள் குழு மீது போலீஸார் தடியடி தாக்குதல் நடத்தியதில் 10க்கும் மேற்பட்டோர்  படுகாயமடைந்தனர்.

இரத்தம் சிந்திய விவசாயிகள்:

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர்  தாக்கியதால் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும்,சிலரின் உடைகள் முழுவதும் இரத்தத்துடன் கூட காணப்பட்டது.

லேசான தடியடி:

ஆனால்,போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் நெடுஞ்சாலையை மறித்ததால்,போக்குவரத்தை பாதிக்கும் என்பதாலும்,ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் கூடுவதற்கு தடை விதித்த பகுதியில் சிஆர்பிசி பிரிவு 144 ஐ மேற்கோள் காட்டி, லேசான தடியடி மட்டுமே நடத்தியதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

அரசியல் தலைவர்கள் கண்டனம்:

காவல்துறையினரின் இந்தகைய நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளிடமிருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த செயலை வன்மையாகக் கண்டித்து, மூத்த காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில், “இன்று நீங்கள் ஹரியானா ஆன்மாவின் மீது லத்தி மழை பொழிந்தீர்கள், வரும் தலைமுறையினர் சாலைகளில் சிந்திய இந்த விவசாயிகளின் இரத்தத்தை நினைவில் கொள்வார்கள்”,என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல,டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்து கூறியதாவது:”அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை இப்படி லத்தி சார்ஜ் செய்வது முற்றிலும் தவறு”,என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் இந்த தடியடி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து கூறியதாவது:”இப்போது மீண்டும் விவசாயிகளின் இரத்தம் சிந்தப்பட்டது.இதனால்,இந்தியா வெட்கத்தில் தலை குனிய வேண்டும்”,என்று கூறியுள்ளார்.

மேலும்,இந்த சம்பவத்தால் கடுமையாக கொந்தளித்துள்ள விவசாயிகள் ஹரியானா போலீஸ் தடியடி நடத்தியதில் யாரேனும் உயிரிழந்தால் மற்றும் கைது செய்தவர்களை விடுவிக்கும் வரையிலும் இந்த போராட்டம் காலவரையின்றி நீடிக்கும் எனவும் விவசாயிகள் எச்சரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்