ஹரியானா அமைச்சர் மீது பாலியல் வன்கொடுமை குற்றசாட்டு.! வீட்டிற்குள் நுழைந்த போலீசார்.!
பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய ஹரியானா அமைச்சர் சந்தீப் சிங் வீட்டில் போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளனர்.
ஹரியானா அமைச்சர் சந்தீப் சிங் மீது பெண் விளையாட்டு பயிற்சியாளர் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகாரை தெரிவித்து இருந்தார். இந்த புகாரின் பெயரில் அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டு இருந்தது.
இந்த புகாரின் பெயரில், பெண் பயிற்சியாளர் இன்று (புதன்கிழமை) நீதிபதி முன்பு தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய நீதிமன்றத்திற்குச் சென்றார். அந்த சமயம் ஹரியானா அமைச்சர் சந்தீப் சிங்கின் இல்லத்திற்கு சண்டிகர் காவல்துறையினர் சென்றடைந்துள்ளனர். மேலும் வீட்டிற்குள் யாரும் வந்துவிட கூடாது என தடுப்புகளை அமைத்தனர்.