ஹரியானாவில் இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் மாநிலத் தலைவர் சுட்டுக்கொலை

ஹரியானா மாநிலத்தில் இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நஃபே சிங் ரதீ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் பகதூர்கர் நகரில் தான் இந்த சம்பவம் இன்று நடந்துள்ளது. அடையாளம் தெரியாத மர்மநபர்களால் நஃபே சிங் கொல்லப்பட்ட நிலையில் அவருடன் சேர்ந்து இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் மற்றொரு நபரும் கொல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்த அந்த நபரின் பெயர் ஜெய்கிஷன் என தெரியவந்துள்ளது. ஹூண்டாய் ஐ10 காரில் வந்த தாக்குதல்தாரிகள் நஃபே சிங் காரை நோக்கி பல முறை சுட்டனர். இதில் பல பாதுகாப்புப் பணியாளர்களும் படுகாயமடைந்தனர். இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி அர்பித் ஜெயின் கூறுகையில், “மத்திய புலனாய்வு அமைப்பு (சிஐஏ) மற்றும் எஸ்டிஎஃப் குழுக்கள் இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கியுள்ளன, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்றார்.

Read More – காரைக்காலில் ரூ.491 கோடி மதிப்பில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் பிரம்மசக்தி சஞ்சீவனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு காயங்களுடன் நான்கு பேர் அனுமதிக்கப்பட்டனர், அதில் இருவர் அதிக ரத்தத்தை இழந்து இறந்துவிட்டனர்” என்றார். இந்த சம்பவம் குறித்து ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் பூபிந்தர் ஹூடா கூறுகையில், “நஃபே சிங் ரதீ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமையை பிரதிபலிக்கிறது” என விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்