ஹரியானாவில் பெண்ணிடம் 20 நாள் கொரோனா சிகிச்சைக்கு 14 லட்சம் கட்டண கொள்ளை
ஹரியானவில் மருத்துவமனை ஒன்றில் கொரோனா சிகிச்சைக்கு கொள்ளை கட்டணம் வசூலிப்பு.
இந்தியாவில் கொரோனா பேரழிவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த பேரிடர் சூழலை பயன்படுத்திக் கொண்டு சில மருத்துவமனைகள் கட்டண கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர், இதனைக் கண்டித்து அரசு தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்து அரசாணை வெளியிட்டிருந்தது.
இருப்பினும் மருத்துவமனைகளில் கட்டண கொள்ளை ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இதனையடுத்து ஹரியானவில் உள்ள பஞ்ச்குலாவின் பராஸ் மருத்துவமனையில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
அதாவது ஹரியானவில் ஆர்த்தி என்ற பெண் தனது கணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து பஞ்ச்குலாவின் பராஸ் மருத்துவமனையில் ஏப்ரல் 12 ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் 20 நாட்களுக்கான சிகிச்சைக் கட்டணமாக 34 பக்கம் கொண்ட கட்டண ரசீதை மருத்துவமனை கொடுத்துள்ளது.
அதில் சிகிச்சைக்கான கட்டணம் 14 லட்சம் இருப்பதை பார்த்து ஆர்த்தி பேரதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் மருத்துவமனையின் கட்டாயத்தால் 13.81 லட்சம் உறவினர்களிடம் வாங்கி கட்டியுள்ளார்.
இதனையடுத்து மே 3 ஆம் தேதி அவர் கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் மருத்துவமனையின் கட்டணகொள்ளையால் ஆர்த்தி மன உழைச்சல் அடைந்து அமைச்சர்கள் மற்றும் சுகாதார செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் தான் இப்போது விதவை என்றும் தனக்கு 13 வயதில் ஒரு மகள் இருப்பதாகவும் கொரோனாவால் இறந்த தன் கனவரின் சிகிச்சைக்கு பராஸ் மருத்துவமனை அதிக கட்டணம் வசூலித்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை தாண்டி பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இதனைக்கண்டித்து மருத்துவமனைக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனைப்பற்றி மருத்துவமனை கூறுகையில் அவர் கணவரின் இறப்புக்கு மறுநாள் தான் அரசின் கட்டண நிர்ணய அறிக்கை வந்ததாகவும், அவரின் குடும்பத்திற்கு ஏற்கனவே இந்த தகவல் தெரியும் என்றும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.