ஹரியானா மாநிலத்தில் சுக்புரா காவல் நிலையத்தில் தாமதமாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ததற்காக பணியாற்றிய அனைத்து காவலர்களையும் சஸ்பெண்ட் செய்து அரியானா உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் தலைமையில், கடந்த வெள்ளிக்கிழமை, விகாஸ் பவனில் வைத்து மாவட்ட மக்கள் தொடர்பு மற்றும் குறைதீர்ப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
அப்போது பல்வேறு புகார்கள் கூறப்பட்டது. அதில் கிட்டத்தட்ட 25 புகார்கள் குறிப்பிடப்பட்டது. அதில் ஒரு புகாராக, போலீசார் தாமதமாக வழக்குப்பதிவு செய்ததாக குறிப்பிடப்பட்டது.
ஹரியானா மாநிலத்தில் சுக்புரா காவல் நிலையத்தில் ஒரு வழக்கறிஞர் , புகார் கூற வந்த போது, காவல்நிலையத்தில் பெரும்பாலானோர் குடித்து இருந்ததாகவும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தாமதமானதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதன் காரணமாக சுக்புரா காவல் நிலையத்தில் அந்த சமயம் பணியாற்றிய அணைத்து ஊழியர்களையும் அரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் மற்ற புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…