தொடங்கியது கோவாக்சின் 3 ஆம் கட்ட சோதனை ! தடுப்பு மருந்தை செலுத்திக் கொண்ட அமைச்சர்
கோவாக்சின் 3 ஆம் கட்ட சோதனையில் முதல் தன்னார்வலராக அமைச்சர் அனில் விஜ் பங்கேற்றுள்ளார்.
உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) உடன் இணைந்து இந்த சோதனை நடத்தபட்டு வருகிறது.அதன்படி, ‘கோவாக்சின்’ என்ற தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் 2-வது கட்ட மருத்துவ பரிசோதனை முடிந்த நிலையில், தன்னார்வலர்களுடன் கோவாக்சின் 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை பாரத் பயோடெக் தொடங்கியுள்ளது .அதுபோல் கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக தடுப்பூசி தயாரித்து வரும் பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் கோவாக்சினின் மூன்றாம் கட்ட சோதனை ஹரியானாவில் தொடங்கியுள்ளது. அம்பாலா மருத்துவமனையில் நடைபெற்ற இந்த தடுப்பூசி பரிசோதனையில் முதல் தன்னார்வலராக அனில் விஜ் பங்கேற்றுள்ளார்.பங்கேற்று கோவாக்சின் தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.இந்த சோதனைக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.