ஒரு காலத்தில் பெண் சிசுக்கொலைக்கு பேர்போன ஹரியானா தற்போது பெண் குழந்தை பிறந்ததைக் கொண்டாடுவதாக, முதல்வர் மனோகர்லால் கட்டார் கூறியுள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் தற்போது ஒவ்வொரு பெண் குழந்தை பிறந்ததையும் கொண்டாடி வருகிறோம், சர்வதேச மகளிர் தினத்தை ‘மகிளா சம்மன் திவாஸ்’ ஆக கொண்டாட வேண்டும் என்று முதல்வர் மனோகர்லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
தற்போது ஹரியானாவில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 923 பெண் குழந்தைகள் இருப்பதாக முதல்வர் தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டு ஜனவரியில் பானிபட்டில் தொடங்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியின் ‘பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ’ திட்டத்தால் தான் இவையனைத்தும் சாத்தியமானது என்று அவர் மேலும் கூறினார்.
ஹரியானாவில் பாலின விகிதத்தை மேம்படுத்த மாநில அரசு, சமூக அமைப்புகள், பஞ்சாயத்துகள், தன்னார்வ கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சுகாதாரத் துறைகள் அயராத முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. மேலும் காவல்துறையும் பெண் சிசுக்கொலையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக உத்தரவிட்டிருந்தனர்.
இத்தகைய கடும் முயற்சிகளால் தான் இன்று ஹரியானாவில், பாலின விகிதாசாரம் அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் ஹரியானாவில், 1,000 ஆண் குழந்தைகளுக்கு 871 பெண்கள் மட்டுமே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காவல்துறையில் பெண்களின் பங்கு 2014இல் 6 சதவீதம் இருந்ததை விட தற்போது 10 சதவீதமாக உயர்ந்துள்ளது. வரும் காலங்களில் இது 15 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது என்று முதல்வர் தெரிவித்தார்.
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…