Haryana : ஹரியானா மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 90 தொகுதிகளில் பாஜக 40 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், ஜனநாயக ஜனதா கட்சி (JJP) 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருந்தது. சுயேட்சைகள் 7 தொகுதிகள் வெற்றி பெற்று இருந்தனர்.
இறுதியில் பாஜக மற்றும் ஜேஜேபி கட்சி கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்து அமைத்தனர். ஹரியானா மாநில முதல்வராக பாஜக மூத்த தலைவர் மனோகர் லால் கட்டார் முதல்வர் பொறுப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில், ஹரியானாவில் உள்ள 10 தொகுதிகளிலும் பாஜக தனித்து போட்டியிட திட்டமிட்டு இருந்தது. இதனால் கூட்டணி கட்சியான JJP கட்சி தனது ஆதரவை பின்வாங்கியது.
இதனை அடுத்து ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார். தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா (JJP) மற்ற அமைச்சர்கள் பொறுப்பில் இருந்தும் தங்கள் பதவியை கூண்டோடு ராஜினாமா செய்த்தனர். இதனை அடுத்து ஹரியானா மாநில புதிய முதல்வர் யார் என்று கேள்வி எழுந்தது.
தற்போது, பாஜக எம்ஏஏக்கள் , சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளது. இந்த முறை முதல்வராக நயாப் சிங் சைனி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதனை அடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரி பாஜக எம்எல்ஏக்கள் உடன், நயாப் சிங் சைனி ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ராயாவை சந்தித்து உள்ளார்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…