“ஹரியானா தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது”- காங்கிரஸ் அறிவிப்பு!

ஹரியானா தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பேட்டி அளித்துள்ளார்.

Jairam Ramesh - Haryana Election Result

டெல்லி : ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில், ஹரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 49, காங்கிரஸ் 36 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன்படி, ஹரியானாவில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது பாஜக கட்சி.

இந்நிலையில், ஹரியானாவில் தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை. அது எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த முடிவுகள் ஹரியானா மக்களின் விருப்பத்திற்கு எதிரான ஒன்றாகும். ஹரியானாவில் வாக்கு எண்ணும் செயல்முறை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் ஹரியானாவில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு குறித்து அக்கட்சி எம்.பி ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “ஹரியானா தேர்தல் முடிவுகள் குறித்து என்ன ஆய்வு செய்ய வேண்டுமோ, அதை கண்டிப்பாக செய்வோம். இதற்கு ஒரு குழுவும் அமைக்கப்படும், இது காங்கிரஸ் கட்சியில் நடைமுறையில் இருந்து வருகிறது.

ஆனால் முதலில், அதில் இருந்து வரும் புகார்களை தேர்தல் கமிஷனுக்கு அனுப்ப வேண்டும். இதனை அனைவரிடமும் பேசி ஆய்வு செய்யப்படும். ஆனால் இப்போது ஆய்வு செய்ய நேரம் இல்லை. வெற்றி எங்களிடம் இருந்து பறிக்கப்பட்டது.

மேலும் அவர் ஜம்மு காஷ்மீர் தேர்தல் குறித்து பேசுகையில், ஜம்முவில் எங்கள் செயல்பாடு சிறப்பாக இருந்திருக்க வேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இதற்கும் சில காரணங்கள் உள்ளன, அது குறித்தும் ஆலோசித்து விவாதம் நடக்கும். ஆனால் மகாராஷ்டிராவில், அதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி முதலிடத்தில் இருந்தது. ஜம்மு காஷ்மீரில் விரைவில் என்சி மற்றும் ஐஎன்சி கூட்டணி அரசு அமையும் என நம்புகிறோம்” என கூறியுள்ளார்.

ஹரியானாவில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்கும் பாஜக, தனது வாக்கு வங்கியையும் உயர்த்திய வண்ணம் உள்ளது 2014ம் ஆண்டு தேர்தலில் 33.20% வாக்குகளை பெற்ற பாஜக, 2019ல் 36.49% பெற்றிருந்தது. 2024 தேர்தலில் தற்போது வரை 39.92% வாக்குகளை பாஜக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்