Haryana Election Results: பாஜக 22 இடங்களிலும், ஆம் ஆத்மி 15 இடங்களிலும் வெற்றி!

Default Image

ஹரியானா பஞ்சாயத்து தேர்தலில் பாஜக 22 இடங்களிலும், ஆம் ஆத்மி 15 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு ஆட்சியில் உள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. ஹரியானாவில் 143 பஞ்சாயத்துகள் மற்றும் 22 ஜில்லா உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க நடத்தப்பட்ட இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.

மாநிலத்தில் உள்ள ஜில்லா பரிஷத்களின் பல இடங்களில் பாஜக, ஆம் ஆத்மி மற்றும் ஐஎன்எல்டி வேட்பாளர்கள் வெற்றியைப் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. ஹரியானா மாநில தேர்தல் ஆணையர் தன்பத் சிங் கூறுகையில், மாநிலத்தில் உள்ள 143 பஞ்சாயத்து சமிதிகளின் 3,081 உறுப்பினர்களில் 117 பேர் ஏற்கனவே ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் மீதமுள்ள 2,964 உறுப்பினர் பதவிகளுக்கு 11,888 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

22 ஜில்லா பரிஷத்களைச் சேர்ந்த 411 உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றதாகவும், இந்தப் பதவிகளுக்கு 3,072 வேட்பாளர்கள் போட்டியிட்டதாகவும் அவர் கூறினார். 22 மாவட்டங்களில் உள்ள 143 தொகுதிகளில் 411 ஜில்லா பரிஷத் உறுப்பினர்கள் மற்றும் மீதமுள்ள 2,964 பஞ்சாயத்து சமிதி உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அமைதியாக முடிந்ததாகவும் குறிப்பிட்டார்.

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து வேட்பாளர்களின் பெயர்கள் குறித்த அறிவிப்பு நவம்பர் 30 ஆம் தேதிக்கு முன் ஹரியானா மாநில அரசிதழில் முறையாக வெளியிடப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஹரியானா பஞ்சாயத்து தேர்தலில் அம்பாலா, யமுனாநகர் மற்றும் குருகிராம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் மொத்தமுள்ள 102 ஜில்லா பரிஷத் தொகுதிகளில் ஆளும் கட்சியான பாஜக 22 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இருப்பினும், பஞ்ச்குலாவில் கட்சி பின்னடைவை சந்தித்தது, அங்கு பாஜக 10 ஜில்லா பரிஷத் இடங்களை இழந்துள்ளது. மறுபுறம், ஆம் ஆத்மி, பஞ்சாயத்து தேர்தல்களில் சிர்சா, அம்பாலா, யமுனாநகர் மற்றும் ஜிந்த் உள்ளிட்ட சில மாவட்டங்களில் 15 ஜில்லா பரிஷத் தொகுதிகளில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி சுமார் 100 ஜில்லா பரிஷத் தொகுதிகளில் போட்டியிட்டது.

அதேசமயம் 72 ஜில்லா பரிஷத் தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய தேசிய லோக்தளம் (INLD) 14 இடங்களில் வெற்றி பெற்றது. ஹரியானா தேர்தல் முடிவுகளில், ஒரு பெரிய ஆச்சரியம், ஆம் ஆத்மி 2வது இடத்தில் உள்ளது என்பதுதான். பஞ்சாயத்து தேர்தலில் காங்கிரஸ் கட்சி சின்னத்தில் போட்டியிடவில்லை.

பல ஜில்லா பரிஷத் தொகுதிகளில் தங்களால் ஆதரித்த வேட்பாளர்களும் வெற்றி பெற்றதாக கூறுகின்றன. பல சுயேட்சை வேட்பாளர்கள் ஜில்லா பரிஷத் தேர்தலில் வெற்றிகளை பதிவு செய்து அரசியல் கட்சிகளுக்கு பெரும் அடியை கொடுத்தனர்.

இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) தலைவரும் எல்லனாபாத் சட்டமன்ற உறுப்பினருமான அபய் சவுதாலாவின் மகனான கரண் சௌதாலா சிர்சாவில் உள்ள ஜிலா பரிஷத்தின் வார்டு எண் 6ல் 600 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். குருக்ஷேத்ரா பாஜக எம்பி நயாப் சிங் சைனியின் மனைவி அம்பாலா ஜிலா பரிஷத்தின் வார்டு எண் 4 லிருந்து ஒரு சுயேச்சையால் தோற்கடிக்கப்பட்டார்.

எனவே, ஹரியானாவில் உள்ளாட்சித் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. ஹரியானாவில் 411 உறுப்பினர்களைக் கொண்ட 22 ஜில்லா பரிஷத்கள் உள்ளன. உள்ளாட்சித் தேர்தலில் வெல்லும் 411 உறுப்பினர்கள் தான் இந்த 22 ஜில்லா பரிஷத்களுக்கு தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அதேபோல அங்கு 143 பஞ்சாயத்துகள் உள்ளன. இதில் வெல்லும் 3,081 உறுப்பினர்கள் அந்தந்த தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi